search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா வைரஸ், காற்றில் பயணிக்குமா? - விஞ்ஞானிகள் ஆய்வு

    கொரோனா வைரஸ் தொற்று காற்றில் பயணிக்க முடியுமா, அப்படியே பயணித்தால் எவ்வளவு தொலைவுக்கு பயணிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
    ஐதராபாத்:

    கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து பரவி வருவது மனித குலத்தையே கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இந்த தருணத்தில் கொரோனா வைரஸ் தொற்று காற்றில் பயணிக்க முடியுமா, அப்படியே பயணித்தால் எவ்வளவு தொலைவுக்கு பயணிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    2 மாதங்களுக்கு முன்பு உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதிய விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் வான்வழி பரவக்கூடியது என்பதற்கு ஆதாரம் உள்ளது என எழுதி உள்ளனர்.

    இந்த நிலையில், கொரோனா வைரஸ் காற்றில் பயணிக்குமா என்பதை அறிவதற்கான ஆய்வை அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்.) அங்கமான ஐதராபாத்தின் சி.சி.எம்.பி. என்னும் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் விஞ்ஞானிகள் தொடங்கி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

    இதை சி.சி.எம்.பி.யின் இயக்குனர் ராகேஷ் மிஷ்ரா உறுதி செய்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, “கொரோனா வைரஸ் எவ்வளவு தூரம் பயணிக்கும், எவ்வளவு நேரம் பயணிக்கும் என்பதை நாங்கள் பார்க்கப்போகிறோம்” என குறிப்பிட்டார்.
    Next Story
    ×