search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யுபிஎஸ்சி அலுவலகம்
    X
    யுபிஎஸ்சி அலுவலகம்

    சிவில் சர்வீசஸ் தேர்வை தள்ளிவைக்கக் கோரி வழக்கு- பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

    சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டதால், இனி தேர்வை தள்ளி வைப்பதற்கு சாத்தியம் இல்லை என யுபிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கடந்த மே மாதம் 31ம் தேதி நடைபெறுவதாக இருந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின்னர் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை ஜூன் 5ம் தேதி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டது. அதில், அக்டோபர் 4ம் தேதி கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வை நாடு முழுவதும் உள்ள 72 நகரங்களில் சுமார் 6 லட்சம் பேர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தேர்வை மேலும் தள்ளி வைக்கக்கோரி, தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டதால், இனி தேர்வை தள்ளி வைப்பதற்கு சாத்தியம் இல்லை என யுபிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    இதனையடுத்து, தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி யுபிஎஸ்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை புதன்கிழமைக்கு (செப்.30) ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×