search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா தடுப்பூசியை வாங்கி வினியோகிக்க மத்திய அரசிடம் ரூ.80 ஆயிரம் கோடி இருக்கிறதா? இந்திய மருந்து நிறுவனம் கேள்வி

    கொரோனா தடுப்பூசியை வாங்கி மக்களுக்கு வினியோகிக்க மத்திய அரசு ரூ.80 ஆயிரம் கோடி வைத்திருக்கிறதா என்று இந்திய மருந்து நிறுவனம் கேள்வி எழுப்பி உள்ளது.
    புனே:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 2-வது நாடு இந்தியா.  கொரோனாவை தடுப்பதற்கு தடுப்பூசி எப்போது வரும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

    இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் சேர்ந்து கூட்டாக ஒரு தடுப்பூசியை உருவாக்கி சோதித்து வருகின்றன.

    இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் இந்த தடுப்பூசியை சோதித்து, தயாரித்து வினியோகிக்க புனேயை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது.

    இந்தியாவில் தடுப்பூசி வினியோகம் தொடர்பாக இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா டுவிட்டரில் பதிவுகள் வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

    இது விரைவான கேள்வி. அடுத்த ஓராண்டில் இந்திய அரசிடம் ரூ.80 ஆயிரம் கோடி இருக்குமா? ஏனென்றால் இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தடுப்பூசி வாங்கி இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வினியோகிக்க அவ்வளவு தேவைப்படும்.

    இதுதான் நாம் சமாளிக்க வேண்டிய அடுத்த சவால்.

    நான் இந்த கேள்வியை கேட்பதற்கு காரணம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள், நம் நாட்டின் தேவைகளுக்கு சேவை செய்வதற்கு, அதாவது கொள்முதல் செய்யவும், வினியோகிக்கவும் நாங்கள் திட்டமிட்டு, வழிநடத்த வேண்டியதிருக்கிறது.

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

    இந்தியாவிலும், நடுத்தர வருமானம் உள்ள நாடுகளிலும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3 டாலர் விலையில் (சுமார் ரூ.225) வழங்கப்படும் என இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
    Next Story
    ×