search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிராக்டர் ஓட்டி வந்த தேஜஸ்வி யாதவ்
    X
    டிராக்டர் ஓட்டி வந்த தேஜஸ்வி யாதவ்

    தேஜஸ்வி யாதவ் டிராக்டர் ஓட்ட, தேஜ் பிரதாப் கூரை மீது பயணிக்க... பாட்னாவில் பிரமாண்ட பேரணி

    வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பாட்னாவில் நடந்த பேரணியின் போது தேஜஸ்வி யாதவ் டிராக்டர் ஓட்ட தேஜ் பிரதாப் யாதவ் கூரை மீது அமர்ந்து வந்தார்.
    பாட்னா:

    மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. 

    இந்நிலையில், வேளாண் மசோதாக்களைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் விவசாய அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட 18 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.  நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
    நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம், ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


    பீகார் மாநிலம் பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பட்ட பேரணி நடைபெற்றது. இதில், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் டிராக்டரை ஓட்டி வந்தார். டிராக்டரின் கூரை மீது அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் அமர்ந்திருந்தார். அவர்களின் டிராக்டரைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் நடந்தும்,  டிராக்டர்களிலும் பின்தொடர்ந்தனர். 

    தர்பங்காவில் நடந்த போராட்டத்தின்போது, ராஷ்டிரிய ஜனதா தளம் தொண்டர்கள் சிலர் எருமை மாடுகளில் சவாரி செய்தபடி வந்தனர்.

    Next Story
    ×