search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரத் பந்த்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போராட்ட களத்தில் இருந்த விவசாயிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
    • இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.

    புதுடெல்லி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளனர்.

    விவசாயிகளை டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிசெய்ய தடுப்புகள் வைத்து போலீசார் மறித்துள்ளனர். போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே அரியானாவின் அம்பாலா மாவட்டம் சம்பு எல்லையில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகளை மீற முயன்றவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. இதனால் முன்னேற முடியாமல் கடந்த 3 நாளாக சம்பு எல்லையிலேயே விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்த கியான் சிங் (63) என்ற முதியவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் பஞ்சாப்பின் ராஜ்புராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின், மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் உள்ள ராஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கியான் சிங்கை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வேறுபாடுகளை ஒதுக்கி மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராவோம் என மற்ற எதிர்க்கட்சிகளுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். #BharathBandh #ManmohanSingh
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தில் மன்மோகன் சிங் பேசுகையில்:-

    மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்துவரும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தற்போது எல்லை மீறி செயல்படுகிறது. இளைஞர்கள், விவசாயிகள், சாதாரண மக்கள் என அனைவரும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை.

    மாறாக மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது. பாஜக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்களின் குரலை உணர்ந்து நாட்டின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை காக்க அனைத்து எதிர்கட்சிகளும் முன்வர வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஓரணியில் திரண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராக வேண்டும்.

    என கூறினார். 
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூரில் அனைத்து கட்சியினர் சாலை மறியல் நடத்தினர். இதில் 150 பேர் கைது செய்யப்பட்டனர். #BharathBandh #PetrolDieselPriceHike

    கடலூர்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே முன்னாள் எம்.எல்.ஏ.வும்., தி.மு.க.தேர்தல் பணிக்குழு செயலாளருமான இள.புகழேந்தி தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டனர்.

    பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று கடலூர் அண்ணா பாலத்துக்கு முன்பு உள்ள கடலூர்-புதுவை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் கடலூர் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் தங்கராசு, நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், வக்கீலுமான சந்திரசேகரன், முன்னாள் மாவட்ட ம.தி.மு.க.செயலாளர் என்.ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன், நகர தி.மு.க.துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் தமிழரசன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, காங்கிரஸ் கட்சி மாநில ஊடக பிரிவு பொதுச்செயலாளர் மணிகண்டன், மீனவரணி தலைவர் கார்த்திகேயன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ராம்ராஜ், தொ.மு.ச.தலைவர் பழனிவேல், நகர ம.தி.மு.க.செயலாளர் ராமசாமி, தி.மு.க. மாணவரணி அகஸ்டின் பிரபாகர் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சாலைமறியல் போராட்டத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன.

    அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ.இள. புகழேந்தி உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை வேனில் ஏற்றிசென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #BharathBandh #PetrolDieselPriceHike 

    மகாராஷ்டிரா விவசாயிகள் ஜூன் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதிவரை தொடர் போராட்டக் களத்தில் இறங்குகின்றனர். ஜூன் 10-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். #bharatbandh
    மும்பை:

    விவசாய விளைபொருள் ஏற்றுமதி கொள்கையை நிர்ணயிக்க வேளாண்மைத்துறை ஆராய்ச்சியாளர்களை நியமிக்க வேண்டும். உற்பத்தி கொள்முதலுக்கான அதிகபட்ச ஆதரவு விலையை அறுவடைக்கு 2 மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும்.

    இயற்கை முறையில் மட்டும் வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதிவரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 130 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய கிசான் கிராந்தி ஜன் அந்தோலன் என்னும் அமைப்பு அறிவித்துள்ளது.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் பத்தாம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இந்த அமைப்பின் உறுப்பினர் குசும் சாவந்த் தெரிவித்துள்ளார். #MaharashtraFarmersstrike #bharatbandh
    ×