search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "communist protest"

    • முள்ளக்காடு முதல் முத்தையாபுரம் வரை 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்
    • பள்ளி, கல்லூரி மாணவர்களும், தொழிலாளர்களும் சென்று வருவதற்கும் நகர பஸ்கள் போதிய அளவு இயக்கப்படவில்லை

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் முள்ளக்காடு முதல் முத்தையாபுரம் வரை 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த பெரும் பகுதி உப்பளம் கட்டுமானம் மற்றும் மூடை சுமக்கும் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி ஆகும்.

    இங்கிருந்து தூத்துக்குடி அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களும், தொழிலாளர்களும் சென்று வருவதற்கும் நகர பஸ்கள் போதிய அளவு இயக்கப்படவில்லை.

    இதனால் தினசரி மாணவர்கள் பொதுமக்கள் நீண்ட நேரம் பஸ் நிறுத்தங்களில் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது. உரிய நேரத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு போக முடியாமல் அவதிப்பட்டனர்.

    நின்று செல்ல கூடிய நகர பஸ்களும், நிறுத்தங்களில் முறையாக நின்று செல்வதில்லை இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை இருந்து வந்தது.

    இதனை கண்டித்து கூடுதல் பஸ்களை இயக்க கோரியும், முறையாக பஸ் நிறுத்தங்களில் நகர பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தியும், தூத்துக்குடி புறநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜா தலைமையில் பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம் இன்று காலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை 7 மணிக்கு தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை முத்தையாபுரத்தில் பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெற்றது.

    கட்சியின் புறநகர் செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, குழு உறுப்பினர்கள் பூராடன் வெள்ளைச்சாமி சுப்பையா, வன்னிய ராஜா, கிளைச் செயலாளர்கள் கிருஷ்ண பாண்டி காசிராஜன், வாலிபர் சங்கம் புறநகர் தலைவர் ஜான்சன், வாலிபர் சங்க புறநகர செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகம் கிளை மேலாளர் சுரேஷ் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தினசரி காலை நேரத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனியாக ஊழியர்கள் நியமித்து கண்காணிக்கபடும் என்றும் கூடுதல் பஸ்கள் இயக்க நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

    மீண்டும் இந்த நிலை தொடர்ந்தால் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.

    • வீரலப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வீரலப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது. சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். டாஸ்மாக் சில்லறை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். 100 நாள் வேலை ஊழல்களை தடுக்க வேண்டும்.

    பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. பாப்புசாமி தலைமை வகித்தார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன் சிறப்புரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர் சிவமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆறுச்சாமி, மனோகரன், முருகேசன், கிளைச் செயலாளர் விக்னேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டுகள் சார்பில் ஈரோடு மேட்டூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. #BharathBandh #PetrolDieselPriceHike

    ஈரோடு:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டுகள் சார்பில் ஈரோடு மேட்டூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஈரோடு பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரகுராமன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    பெட்ரோல், டீசல் விலை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோடு மேட்டூர் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் ஈரோடு மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகளை கைது செய்தனர். #BharathBandh #PetrolDieselPriceHike 

    தமிழக அரசின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து கீரனூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கீரனூர்:

    தமிழக அரசுசொத்து வரி, வீட்டு வரிகுடிநீர்வரி ஆகியவற்றை உயர்த்தியுள்ளதை கண்டித்து குன்றாண்டார் கோவில் ஒன்றியம் கீரனூர் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கீரனூர் கடைவீதியில் உள்ள காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஏழுமலை தலைமை தாங்கினார், டேவிட் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தை சிதம்பரம் தொடங்கிவைத்து பேசினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நடராசன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை பற்றி விளக்கி பேசினார்.உடனடியாக தமிழக அரசு உயர்த்தப்பட்டுள்ள வரிகளை நீக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் எனகூறினார். #tamilnews
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்த்தின் போது போலீசார் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இதை கண்டித்தும் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் எதிர் கட்சிகள், தனனார்வ அமைப்பினர், மாணவ அமைப்பினர் உள்ளிட்ட அமைப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்றும் எதிர் கட்சிகள் சார்பாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திண்டுக்கல்லில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பாண்டி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், நிர்வாகிகள் கணேசன், ராணி, பாபு, மாவட்ட குழு கல்யாண சுந்தரம், நகர செயலாளர் ஆசாத், ஒன்றிய செயலாளர் அஜய் கோஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சந்தானம், நிர்வாகிகள் ஜெயமணி, பாலுபாரதி, ரவி, மணிகண்டன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு உடனே பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌ஷம் எழுப்பினர்.

    ×