search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக கவசங்கள்
    X
    முக கவசங்கள்

    கொரோனா பெருந்தொற்று தவிர்க்க வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்கள் பாதுகாப்பானது - ஆய்வில் கண்டுபிடிப்பு

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் தவிர்க்க வீடுகளில் தயாரித்து பயன்படுத்தப்படுகிற முக கவசங்கள் மிகவும் பாதுகாப்பானவை என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    முக கவசங்களை 90 சதவீத மக்கள் அணியத்தொடங்கினாலே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி விடலாம் என சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த அளவுக்கு முக கவசங்கள், செயல்திறன் மிக்கவையாக இருக்கின்றன.

    கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதில் என்-95 முக கவசங்கள், மருத்துவ முக கவசங்கள் பயனுள்ளவையாக இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்தது.

    இப்போது பலரும் வீடுகளில் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை அணிந்து கொண்டு பொதுவெளிக்கு வருவதையும் பார்க்க முடிகிறது.

    இப்படிப்பட்ட முக கவசங்கள் பற்றிய ஆய்வை அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இதில் தெரிய வந்துள்ள முடிவுகள்-

    * பேசும்போது, இருமும்போது, பெரிய அளவில் நீர்த்திவலைகளை உருவாக்குகின்றன. இவை வைரஸ் துகள்களை சுமந்து செல்லக்கூடியவை

    * பெரிய அளவிலான நீர்த்திவலைகள் சிக்கலை உண்டுபண்ணுகின்றன. அவை சிறிய துளிகளாக உடைந்து காற்றில் பறக்கும்.

    * விஞ்ஞானிகள், வீடுகளில் உள்ள புதிய மற்றும் பயன்படுத்திய ஆடைகள், படுக்கை விரிப்புகள், டிஷ் துணி உள்ளிட்ட 11 துணிகளின் சுவாசம் மற்றும் நீர்த்திவலைகள் தடுப்பு திறனை பரிசோதித்தனர். இதற்கு மருத்துவ முக கவசத்தை ஒரு அளவுகோலாக பயன்படுத்தினர்.

    பின்னர் அவற்றின் கட்டுமானம், நூலிழைகள் உள்ளடக்கம், எடை, நூல் எண்ணிக்கை, தண்ணீரை உறிஞ்சும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தினர்.

    * ஆய்வின் முடிவில், வீட்டில் உள்ள 11 பொதுவான துணிகளும் 100 நானோ மீட்டர் துகள்களை தடுப்பதில் கணிசமான பயனுள்ளளதாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

    அதிலும் குறிப்பாக பேசும்போது, இருமும்போது, தும்மும்போது வெளிப்படுகிற உயர்வேக நீர்த்திவலைகளை தடுப்பதில் பயனுள்ளவை என தெரிய வந்துள்ளது. ஒற்றை துணியில் (சிங்கிள் லேயர்) செய்யப்படுகிற முக கவசம் கூட, இந்த நீர்த்திவலைகளை தடுக்கும்.

    * 2 அல்லது 3 அடுக்குகளை கொண்ட துணிகள் மட்டுமின்றி டி சர்ட் போன்ற அதிகம் ஊடுருவக்கூடிய துணிகள் கூட மருத்துவ முக கவசம்போல நீர்த்திவலைகளை தடுக்கிற செயல்திறனை கொண்டுள்ளன. அது மட்டுமின்றி ஒப்பிடக்கூடிய அல்லது சிறந்த சுவாசத்தை பராமரிக்கின்றன.

    இவ்வாறு அந்த ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
    Next Story
    ×