search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னல் தாக்கு
    X
    மின்னல் தாக்கு

    பீகாரில் மின்னல் தாக்கி 15 பேர் பலி: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி

    பீகார் மாநிலத்தில் இன்று மின்னல் தாக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
    பீகாரில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது. மக்கள் மழை பெய்யும் நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் கூறிய நிலையில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கில் 15 பேர் உயிரிழந்தனர்.

    வைஷாலி மாவட்டத்தின் ராகவ்பூர் பிளாக்கில் நான்கு பேரும், ரோடாஸ், போஜ்பூர், கோபால்கஞ்ச், சரண் மாவட்டங்களில் தலா இரண்டு பேரும், பாட்னா, அராரியா, சுபால், கைமுரில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

    பீகாரில் இந்த வருடம் வரை 330 பேர் உயிரிழந்துள்ளர். குறிப்பாக ஜூன் 24-ந்தேதியில் மட்டும் 100 பேர் உயிரிழந்தனர்.
    Next Story
    ×