search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடாளுமன்ற மக்களவை
    X
    நாடாளுமன்ற மக்களவை

    எம்.பி.களுக்கான ஊதியக் குறைப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

    நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை குறைப்பதற்கான திருத்தப்பட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவீதம் குறைப்பதற்கான திருத்தப்பட்ட எம்.பி.களுக்கான சம்பளம், அலவன்ஸ், பென்சன் சட்ட மசோதாவை நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.

    நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வூதிய திருத்த அவசரச் சட்டம்-2020 என்ற அவசரச் சட்டத்துக்கு மாற்றாக இந்த நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வுதிய திருத்த மசோதா-2020 அறிமுகம் செய்யப்பட்டது.

    கொரோனா பாதிப்பின்போது மக்களுக்கு விரைவான நிவாரணம், உதவிகள் வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டமானது கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஏப்ரல் 7-ம் தேதி வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை குறைப்பதற்கான மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
    Next Story
    ×