search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார்
    X
    கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார்

    கர்நாடக மாநில பாஜக தலைவருக்கு கொரோனா

    கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பெங்களூர்:

    கர்நாடக மாநில சுகாதாரத்துறை அறிக்கையின்படி, மாநிலத்தில் நேற்று புதிதாக 8 ஆயிரத்து 852 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 35 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று 7 ஆயிரத்து 101 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 42 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் 88 ஆயிரத்து 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் கொரோனா தாக்குதலுக்கு நேற்று 106 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு பல அரசியல்வாதிகளும் இலக்காகி வருகின்றனர். 

    இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் நளின்குமார் கட்டீல் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு
    வைரஸ் தொடர்பான எந்த அறிகுறிகளும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×