search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால்
    X
    கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால்

    ஜேஇஇ, நீட் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் - ரமேஷ் பொக்ரியால்

    ஜேஇஇ மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் என மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா பரவலை கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனை முன்னிறுத்தியும் ஜே இ இ மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    ஆனாலும், திட்டமிட்டதேதிகளில் ஜேஇஇ மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ஜேஇஇ மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் என மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 8.5 லட்சம் மாணவர்களில் 7.5 லட்சம் பேர் தேர்வுக்கான அனுமதி சீட்டை பதிவிறக்க்கம் செய்துள்ளனர்.

    இதேபோல், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 15 லட்சம் மாணவர்களில் 10 லட்சம் பேர் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். இது எதைக் காட்டுகிறதென்றால், ஜே.இ.இ. மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×