search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் ஊழியரை முத்தமிட்ட தாசில்தார்
    X
    பெண் ஊழியரை முத்தமிட்ட தாசில்தார்

    பெண் ஊழியரை முத்தமிட்ட தாசில்தார் - சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

    பெண் ஊழியருக்கு, தாசில்தார் குரு பசவராஜ் முத்தம் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கொப்பல் (மாவட்டம்) தாசில்தாராக பணியாற்றி வருபவர் குரு பசவராஜ். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கொப்பல் மாவட்டம் குஷ்டகியில் தாசில்தாராக பணியாற்றினார். அப்போது அவர் தாலுகா அலுவலகத்தில் வைத்து தன்னுடன் வேலை பார்த்து வந்த ஒரு இளம்பெண்ணுக்கு பணி நேரத்திலேயே முத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இந்த காட்சிகள் அலுவலகத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இந்த நிலையில் பெண் ஊழியருக்கு, தாசில்தார் குரு பசவராஜ் முத்தம் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவை பார்த்த பலரும் பணி நேரத்தில் அரசு அலுவலகத்தில் வைத்து இப்படி செய்யலாமா? என்று குரு பசவராஜிற்கு எதிராக தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
    Next Story
    ×