search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேந்திர பட்னாவிஸ்
    X
    தேவேந்திர பட்னாவிஸ்

    நாட்டின் கொரோனா தலைநகர் மகாராஷ்டிரா - தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு

    நாட்டின் கொரோனா தலைநகராக மகாராஷ்டிரா மாறி உள்ளது என முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம் செய்துள்ளார்.
    மும்பை:

    இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 84 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    இந்நிலையில், நாட்டின் கொரோனா தலைநகராக மகாராஷ்டிரா மாறி உள்ளது என முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    நாங்கள் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. அரசியல் செய்வதைவிட கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மிகவும் ஆர்வமாக உள்ளோம். மாநிலத்தில் கொரோனா சோதனையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறேன்.

    நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 24 சதவீதம் மகாராஷ்டிராவில் உள்ளது. இதேபோல நாட்டின் மொத்த பலி எண்ணிக்கையில் 41 சதவீதம் பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் நாட்டின் கொரோனா தலைநகராக மகாராஷ்டிரா மாறி உள்ளது என குற்றம் சாட்டினார். 
    Next Story
    ×