search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனாவில் இருந்து குணம் அடைந்து ஒரே நாளில் 52 ஆயிரம் பேர் வீடு திரும்பினர்

    இந்தியாவில் 51 ஆயிரத்து 706 பேர், கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு நிம்மதியுடன் திரும்பினர்
    புதுடெல்லி:

    இந்தியாவில் நேற்று தொடர்ந்து 7-வது நாளாக கொரோனா வைரஸ் தொற்று, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதித்துள்ளது. ஆனாலும் குணம் அடைவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது ஆறுதலையும், நம்பிக்கையையும் அளிப்பதாக அமைந்துள்ளது.

    அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் இந்தியாவில் 51 ஆயிரத்து 706 பேர், கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு நிம்மதியுடன் திரும்பினர். இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 12 லட்சத்து 82 ஆயிரத்து 215 ஆக அதிகரித்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இந்தியாவில் குணம் அடைந்தோர் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து 67.19 சதவீதம் ஆகி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் நாட்டில் கொரோனாவுக்கு 857 பேர் இரையாகி, மொத்த பலி எண்ணிக்கை 39 ஆயிரத்து 795 ஆக உயர்ந்துள்ளது.

    இருப்பினும் பலி விகிதம் 2.09 சதவீதமாக குறைந்திருக்கிறது என்பது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. மேலும் நாட்டில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது. ஆனாலும் குணம் அடைந்தோர் எண்ணிக்கையும் 12 லட்சத்து 82 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 6 லட்சத்து 95 ஆயிரத்து 972 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.

    நேற்று முன்தின நிலவரப்படி நாட்டில் 2 கோடியே 14 லட்சத்து 84 ஆயிரத்து 402 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×