search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் பரவமழை காலம் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக பீகார், அசாம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மகாராஷ்டிராவின் மும்பை, தானே, புனே,ரைய்ஹட் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. மேலும், மழையின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் ரெட் அலர்டு கொடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   

    கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும், சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×