search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெராயின்
    X
    ஹெராயின்

    ஆற்றில் அனுப்பப்பட்ட ரூ.15 கோடி போதைப்பொருள்

    பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஆற்றில் அனுப்பப்பட்ட ரூ.15 கோடி போதைப்பொருளை பஞ்சாபில் எல்லை பாதுகாப்பு படை கைப்பற்றியது
    ஜலந்தர்:

    பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஒருபுறம் இந்தியாவுக்குள் ஊடுருவி வரும் நிலையில், மறுபுறம் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் அங்கிருந்து இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுகின்றன. பஞ்சாப் எல்லை வழியாக அடிக்கடி இத்தகைய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் பஞ்சாப்பில் பாகிஸ்தான் எல்லைப்பகுதி வழியாக பாயும் ராவி ஆற்றில் எல்லை பாதுகாப்பு படையினர் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் பார்சல் ஒன்று ஆற்று நீரில் மிதந்து வந்தது. உடனே வீரர்கள் அந்த பார்சலை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் 2 பிளாஸ்டிக் பாட்டில்கள் இருந்தன. அவற்றில் 2.980 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.14.90 கோடி ஆகும்.

    பாகிஸ்தானை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் சகாக்களுக்கு இதை ஆற்று வழியாக அனுப்பியிருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×