என் மலர்

  செய்திகள்

  பிரதமர் மோடி
  X
  பிரதமர் மோடி

  புதிய கல்விக் கொள்கை... நாளை மாலை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா தாக்கம், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக நாளை மாலை பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
  புதுடெல்லி: 

  இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்குவது, தொழில்முறைக் கல்வி, நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள், ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு, வெளியேறுதல், ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்குவது, ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி, மும்மொழிக் கொள்கை, எம்.பில் படிப்புகள் ரத்து, சமஸ்கிருதத்தை மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வருவது என பல விஷயங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  இதில் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட சில அம்சங்களுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்ப்புகளுக்கு மத்தியில், மத்திய மந்திரிசபை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

  புதிய கல்விக் கொள்கை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பு கருத்துகளை வெளியிடுகின்றனர்.

  இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அவர் விளக்கமாக பேச உள்ளார். 

  மேலும், கொரோனா பாதிப்பு, விமானப் படையில் ரபேல் போர் விமானங்கள் சேர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் பிரதமர் தனது உரையில் குறிப்பிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×