search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணையம்
    X
    தேர்தல் ஆணையம்

    பீகார் சட்டசபை தேர்தல்: மூத்த குடிமக்கள் தபால் வாக்களிக்கும் முறை இல்லை - தேர்தல் ஆணையம்

    பீகார் சட்டசபை தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்கும் முறையை கொண்டுவரும் திட்டமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு இறுதியில் அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் முடிகிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்துக்கு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.   இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன.

    இந்நிலையில் தேர்தல் ஆணையம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

    அதில், நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்கும் முறையை கொண்டுவரும் திட்டமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவை பணியில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்களிக்க அனுமதி வழங்கியுள்ளது.

    பீகார் சட்ட மன்றத்தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி உள்ள நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×