search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    டெல்லியில் ஒரே நாளில் 1,652 பேருக்கு கொரோனா - 58 பேர் பலி

    டெல்லியில் ஒரே நாளில் 1,652 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்தது.
    புதுடெல்லி:

    டெல்லியில் ஜூலை 15ந்தேதி வரை 2.25 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது.  ஆனால், டெல்லியில் இன்று 1.15 லட்சம் பாதிப்புகளே பதிவாகி இருந்தன.  மத்திய அரசு, என்.ஜி.ஓ.க்கள் மற்றும் மத அமைப்புகள் அளித்த உதவியால் இந்த நிலை சாத்தியப்பட்டது என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
     
    இந்நிலையில் டெல்லியில் இன்று 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனால் மொத்த எண்ணிக்கை, 1,18,645 ஆக உயர்ந்து உள்ளது.  கொரோனா தொற்று காரணமாக 58 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,545 ஆக உள்ளது.  17,407 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
    Next Story
    ×