search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லடாக் லே பகுதியில் உள்ள சுசோட்
    X
    லடாக் லே பகுதியில் உள்ள சுசோட்

    லடாக் லே பகுதி கிராமத்தை சேர்ந்த அனைவரும் ராணுவத்தில் சேவையாற்றுகிறார்கள்

    லடாக் மாவட்டம் லே பகுதியில் உள்ள சுசோட் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்மகனும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
    இந்தியாவில் லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில்தான் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டனர். இந்த பகுதி இந்திய கடல்மட்டத்தில் இருந்து சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. எப்போது பனி சூழ்ந்து குளிர்ப்பகுதியாக காணப்படும்.

    லடாக் மாவட்டம் லே பகுதியில் சாசோட் என்ற குட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 63 வீடுகள் உள்ளது. இந்த 63 வீட்டில் உள்ள ஆண்மகன்களும் ராணுவத்தில் சேவை புரிந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் எல்லையில் உள்ள முன்கள நிலைகளில் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில் ‘‘எனக்கு இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. அனைவரையும் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற விரும்புகிறேன்’’ என்றார்.

    மற்றொரு பெண் ‘‘எனது கணவர் ராணுவத்தில் உள்ளார். மாதத்திற்கு ஒருமுறைதான் போன் செய்வார்.’’ என்றார்.

    ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நபர் ஒருவர் கூறுகையில் ‘‘இந்த கிராமம் தேசபக்தி கொண்டது. இதனால்தான் ஒவ்வொருவரையும் ராணுவத்திற்கு அனுப்புகிறோம்’’ என்றார்.
    Next Story
    ×