search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க மாஸ்க் அணிந்துள்ள சங்கர்
    X
    தங்க மாஸ்க் அணிந்துள்ள சங்கர்

    என்னதான் வசதி இருந்தாலும் இப்படியா...? தங்கத்தில் மாஸ்க் தயாரித்து அணியும் பணக்காரர்

    புனேயைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் தங்கத்தில் மாஸ்க் செய்து அணிந்து வருவது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
    புனே:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் முக்கியமான அம்சமாக கருதப்படுவது மாஸ்க். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்காக முகம் மற்றும் மூக்கை மூடும் வகையில் மாஸ்க்குகளை அணிகின்றனர். 

    கொரோனாவை தடுக்க அத்தியாவசியமான ஒன்றான மாஸ்க், பல்வேறு வடிவங்கள் மற்றும் பல்வேறு தரங்களில் கிடைக்கின்றன. சிலர் கைக்குட்டை, துப்பட்டா, டவல், முந்தானை என தங்களிடம் இருப்பதையே மாஸ்க்காக பயன்படுத்துவதை காண முடிகிறது. 

    தங்க மாஸ்க் மற்றும் நகைகள் அணிந்துள்ள சங்கர்

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த சங்கர் குரேட் என்பவர் தங்கத்தினால் மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து வருகிறார். ரூ.2.89 லட்சம் மதிப்புள்ள இந்த மாஸ்க்கில் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ளன. இதனால் சுவாசிப்பதில் அவருக்கு பிரச்சனை இல்லை. ஆனால், கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க இந்த மாஸ்க் உதவுமா என்பது சந்தேகம்தான் என்கிறார் சங்கர்.

    தங்க நகைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சங்கர், தங்க மாஸ்க் அணிந்து போஸ் கொடுக்கும் புகைப்படங்களை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை கேலியும் கிண்டலுமாக பதிவு செய்துள்ளனர்.

    இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.5 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில், 18655 பேர் உயிரிழந்துள்ளனர். புனேயில் மட்டும் சுமார் 6000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 274 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×