search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் பலாத்காரம்
    X
    பாலியல் பலாத்காரம்

    டெல்லி சி.பி.ஐ. நீதிமன்ற வளாகத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் - ஊழியர் கைது

    டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற அறையில் இளம்பெண் ஒருவர் நீதிமன்ற ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி ரோஸ் அவென்யூவில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உள்ளது. இங்குள்ள ஒரு அறையில் இளம்பெண் ஒருவர் நீதிமன்ற ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண், பழைய டெல்லியைச் சேர்ந்தவர். அவருக்கு சுமார் 30 வயது இருக்கும். இவருக்கும், ரோஸ் அவென்யூ நீதிமன்ற ஊழியர் கல்யாணபுரியைச் சேர்ந்த ராஜேந்திர சிங் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களாக பழக்கம் இருந்ததாகவும், இதனை பயன்படுத்தி ராஜேந்திர சிங் அந்த பெண்ணை பல நாட்களாக தனிமையில் சந்திக்க வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதன்பேரில் அந்த பெண், ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்துக்கு சென்றுள்ளார். கொரோனா நோய் பரவல் காரணமாக நீதிமன்றம் செயல்படாததால், வளாகம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஊழியர், அந்த பெண்ணை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து பெண்ணின் புகாரின் பேரில், நீதிமன்ற ஊழியரை கைது செய்து, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்த போலீசார், கோர்ட்டு உத்தரவுப்படி அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    இந்த சம்பவம் பற்றி வக்கீல் சங்க செயலாளர் சித்தார்த் நன்வால் கூறுகையில், வழக்கின் உண்மை தன்மை எங்களுக்கு சரிவர தெரியவில்லை. நீதிமன்றம் அதை விசாரித்து முடிவு எடுக்கும். உண்மையிலேயே குற்றம் நடந்திருந்தால் அதை நாங்கள் கண்டிக்கிறோம் என்றார்.
    Next Story
    ×