search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்
    X
    எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்- இந்திய வீரர் உயிரிழப்பு

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. 

    இந்நிலையில், இன்று காலை ஜம்மு காஷ்மீரின் புஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களின் பல்வேறு செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவம் இன்று தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் குண்டுகள் மூலம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்திய ராணுவம் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 

    இதில், ரஜோரி மாவட்டத்தில் நடந்த சண்டையில் இந்தியா தரப்பில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். இதன்மூலம் இந்த மாதத்தில் இதுவரை 5 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

    பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 1400க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த ஆண்டு 3168 முறையும், 2018ல் 1629 முறையும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×