search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகக்கவசம்
    X
    முகக்கவசம்

    கர்நாடகத்தில் இன்று முகக்கவச தினம் அனுசரிப்பு

    கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) முகக்கவச தினம் அனுசரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக அரசு 18-ந் தேதி (அதாவது இன்று) முகக்கவச தினமாக அறிவித்து, அதை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது. மாவட்ட, தாலுகா அளவிலும் முக்கிய பிரமுகர்களை அழைத்து பாதயாத்திரை நடத்தி முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாவட்ட, தாலுகா, நகராட்சி, கிராம பஞ்சாயத்து அளவில் அதிகாரிகள் முகக்கவச பாதயாத்திரையை இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ள வேண்டும். பாதயாத்திரையில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    இந்த பாதயாத்திரையின்போது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது, சானிடைசர் திரவத்தை பயன்படுத்தி கைகளை தூய்மைப்படுத்துவது, முகக்கவசம் அணிவது போன்ற படங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி செல்ல வேண்டும்.

    இவ்வாறு தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×