search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.கே.சிவக்குமாரின் மகள் திருமண நிச்சயதார்த்தம்
    X
    டி.கே.சிவக்குமாரின் மகள் திருமண நிச்சயதார்த்தம்

    எளிமையாக நடந்தது டி.கே.சிவக்குமாரின் மகள் திருமண நிச்சயதார்த்தம்

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யா, மறைந்த கபே காபி-டே அதிபர் சித்தார்த்தின் மகனுமான அமர்த்யா ஆகியோரின் திருமண நிச்சயம் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள டி.கே.சிவக்குமார் வீட்டில் வைத்து எளிமையாக நடந்தது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு, நாள் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது.

    இந்த நிலையில் நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யா, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களின் ஒருவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேரனும், மறைந்த கபே காபி-டே அதிபர் சித்தார்த்தின் மகனுமான அமர்த்யா ஆகியோரின் திருமண நிச்சயம் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள டி.கே.சிவக்குமார் வீட்டில் வைத்து எளிமையாக நடந்தது.

    இந்த திருமணத்தில் டி.கே.சிவக்குமாரின் நண்பர்கள், குடும்பத்தினர், முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×