search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன்
    X
    மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன்

    பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நல்ல நிலை -மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்

    கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா நல்ல நிலையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் குழுவின் 16வது கூட்டம், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது பேசிய மந்திரி ஹர்ஷவர்தன், கொரோனாவுக்கு எதிரான போராட்டம் மற்றும் வைரசை கட்டுப்படுத்துவதில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா நல்ல நிலையில் உள்ளது என்றும்,  ஆனால் அதில் மன நிறைவு அடைய முடியாது என்றும் கூறினார்.

    சமூக விலகல்

    தனி மனித இடைவெளி, முக கவசம், கைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகளே கொரோனாவை தடுக்கும் சமூக ஆயுதம் என ஹர்ஷவர்தன் குறிப்பிட்டார்.

    கொரோனாவால் தங்களுக்கு ஏற்படும் ஆபத்து தொடர்பான மதிப்பீட்டிற்கும், வைரசுக்கு எதிரான பாதுகாப்பிற்கும் உதவும் ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் நினைவுபடுத்தினார். நாடு முழுவதும் இதுவரை 12.55 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
    Next Story
    ×