search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஊரடங்கை முறையாக பின்பற்றியதால் கொரோனா பாதிப்பு இல்லாத டாமன் டையூ யூனியன் பிரதேசம்

    மக்கள் ஒத்துழைப்பு காரணமாக, டாமன் டையூ யூனியன் பிரதேசம் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக மாறியுள்ளது.
    டாமன்:

    யூனியன் பிரதேசமான டாமன் டையூ கொரோனா வைரஸ் ஊரடங்கை முறையாக பின்பற்றியதால், பாதிப்பு இல்லாத பகுதியாக மாறியுள்ளது.

    இதுகுறித்து, யூனியன் பிரதேச நிர்வாகி பிரபுல் படேல் கூறியதாவது:-

    டையூ மற்றும் டாமனில் உள்ள தொழில் நிறுவனங்களில், 2.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கொரோனா வைரசால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மராட்டியம், குஜராத் மாநிலங்களின் எல்லைகளில், இந்த பகுதிகள் அமைந்துள்ளன.

    ஆனாலும், ஊரடங்கு விதிகளை மக்கள் கடுமையாக பின்பற்றியதால், வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதியாக மாறியுள்ளது. இதற்கு காரணம், வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் எங்கள் பணியாளர்கள், மிக தீவிரமாக இருந்தனர். மக்களும், ஊரடங்கு அமுலில் இருந்த, 75 நாட்களும், முழுமையாக ஒத்துழைத்தனர்.

    தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில், 19 பேர் மட்டும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால், சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், டையூ மற்றும் டாமனில், இதுவரை யாருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×