search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்
    X
    நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

    மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று 80 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 9887 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 6642 ஆக உயர்ந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் மொத்தம் 236657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 9887 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 294 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6642 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 114073 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 4611 பேர் குணமடைந்துள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 80229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 28694 பேருக்கும், டெல்லியில் 26334 பேருக்கும், குஜராத்தில் 19094 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

    அந்தமான் நிகோபார் தீவுகள் - 33
    ஆந்திர பிரதேசம் - 4303
    அருணாச்சல பிரதேசம் - 45
    அசாம் - 2153
    பீகார் - 4596
    சண்டிகர் - 304
    சத்தீஸ்கர் - 879
    தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 14
    டெல்லி - 26334
    கோவா - 196
    குஜராத் - 19094
    அரியானா - 3597
    இமாச்சல பிரதேசம் - 393
    ஜம்மு - காஷ்மீர்- 3324
    ஜார்க்கண்ட் - 881
    கர்நாடகா - 4835
    கேரளா - 1699
    லடாக் - 97
    மத்திய பிரதேசம் - 8996
    மகாராஷ்டிரா - 80229
    மணிப்பூர் - 132
    மேகாலயா - 33
    மிசோரம் - 22
    நாகலாந்து - 94
    ஒடிசா - 2608
    புதுச்சேரி - 99
    பஞ்சாப் - 2461
    ராஜஸ்தான் - 10084
    சிக்கிம் - 3
    தமிழ்நாடு - 28694
    தெலுங்கானா - 3290
    திரிபுரா - 692
    உத்தரகாண்ட் - 1215
    உத்தர பிரதேசம் - 9733
    மேற்கு வங்காளம் - 7303

    மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உள்படுத்தப்பட்ட நோயாளிகள்-8192

    மொத்தம் - 236657.
    Next Story
    ×