search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டு விமான பயணி - கோப்புப்படம்
    X
    வெளிநாட்டு விமான பயணி - கோப்புப்படம்

    தாயகம் திரும்ப விரும்பும் - இந்தியர்களில் யாருக்கு முன்னுரிமை?

    வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
    புதுடெல்லி:

    வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள், முதலில் அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களில் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். கட்டாய சூழ்நிலைகளில் உள்ளவர்கள் தாயகம் திரும்ப முன்னுரிமை அளிக்கப்படும்.

    மத்திய அரசு


    வேலை இழந்தவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கர்ப்பிணிகள், குடும்ப உறுப்பினரின் இறப்புக்கு செல்பவர்கள், விசா முடிவடையும் நிலையில் இருப்பவர்கள், அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள், முதியோர், மாணவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயண செலவை அவர்களே ஏற்க வேண்டும்.

    அதுபோல், இந்தியா திரும்பிய பிறகு, சுகாதார அமைச்சகம் வகுத்த நெறிமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×