search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்
    X
    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்

    கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.38 லட்சத்தை தாண்டிய நிலையில், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, உள்நாட்டு விமான சேவை இன்று  தொடங்கி உள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் ரெயில் சேவையும் தொடங்க உள்ளது.

    இந்த சூழ்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1,38,845 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4021 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57,721 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    இதன்மூலம் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானை பின்னுக்குத் தள்ளி, முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 10வது இடத்தில் உள்ளது.

    உலகம் முழுவதும் 55 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 23.03 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

    கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகள் வருமாறு:-

    அமெரிக்கா - 1,686,436
    பிரேசில்- 365,213
    ரஷியா- 344,481
    ஸ்பெயின்- 282,852
    பிரிட்டன்- 259,559
    இத்தாலி- 229,858
    பிரான்ஸ்- 182,584
    ஜெர்மனி-180,328
    துருக்கி-156,827
    இந்தியா-138,845.
    Next Story
    ×