search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி
    X
    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி

    24 மணி நேரத்தில் 63 பேர் மரணம்: மகாராஷ்டிராவில் கொரோனா உயிரிழப்பு 1500-ஐ தாண்டியது

    கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
    மும்பை:

    இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 125101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3720 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 51784 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

    நாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.

    மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2940 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 44582 ஆக உயர்ந்துளள்து. கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1517 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் 14753 பேருக்கும், குஜராத்தில் 13268 பேருக்கும், டெல்லியில் 12319 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×