search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கொரோனாவுக்கு எதிராக போராடும் நாயகர்களுக்கு நாடு தலைவணங்குகிறது - பிரதமர் மோடி

    கொரோனா வைரசை எதிர்த்துப் போரிடும் கதாநாயகர்களுக்கு தேசம் தலை வணங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 

    இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் மக்களும், அரசும் இணைந்து செயல்படுகின்றன. இந்த போரில் குடிமக்கள் அனைவரும் போர் வீரர்கள் போல் செயல்படுகின்றனர்.

    இந்தப் போராட்டத்தில் ஏழைகளுக்கு சிலர் உணவு வழங்குகின்றனர். சிலர் நிலத்தை விற்று உதவுகின்றனர். இன்னும் சிலர் பென்ஷனை அளித்துள்ளனர்.

    யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை நமது விவசாயிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சமயத்தில் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

    சிலர் வாடகையை தள்ளுபடி செய்துவிட்டனர். பள்ளிகளில் தங்கியுள்ள தொழிலாளர்கள் அந்த பள்ளியை தூய்மைப்படுத்தியுள்ளனர். இன்னும் சிலர் மாஸ்க்குகள் தயாரித்துக் கொடுக்கின்றனர். நாடு சரியான பாதையில் செல்கிறது.

    டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மிகவும் கண்டனத்திற்கு உரியது. அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு எதிராக போராடும் நாயகர்களுக்கு நாடு தலை வணங்குகிறது. சுகாதார பணியாளர்களின் பணி போற்றுதலுக்கு உரியது. தூய்மை பணியாளர்களின் சேவையை தற்போது அனைவரும் உணர்கின்றனர். போலீசார் உதவி செய்வதை நாம் பார்க்கிறோம். போலீசாரின் பணியும் பாராட்டுக்குரியது.

    கொரோனாவை எதிர்த்து போரிடும் மாநில அரசுகளை பாராட்டுகிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு இந்தியா உதவியுள்ளது.

    கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவது கட்டாயம். இனிமேல் மாஸ்க் குறித்த நமது பார்வை நிச்சயம் மாறும். சாலைகளில் எச்சில் துப்புவதை பாவம் என மக்கள் நினைக்க தொடங்கி விட்டனர். இதனால் சாலைகளில் எச்சில் துப்புவது உள்ளிட்ட தீய பழக்கங்களை கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. சமூக விலகல் தற்போது முக்கியம்.

    கொரோனாவை எதிர்த்து போரிடும் வீரர்களுடன் அனைவரும் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு, அனைவரும் தேசத்திற்கு பாடுபட வேண்டும். அத்தியாவசிய சேவைகளில் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×