search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை தாராவி
    X
    மும்பை தாராவி

    மும்பையில் தமிழர்கள் வசிக்கும் தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா

    மும்பையில் தமிழர்கள் வசிக்கும் தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
    மும்பை:

    ஆசியாவிலேயே பெரிய குடிசை பகுதியாக மும்பையில் உள்ள தாராவி உள்ளது. இங்கு தமிழர்கள் தான் அதிகமாக வசித்து வருகின்றனர்.

    தாராவியில் 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சராசரியாக ஒரு அறையில் 6 பேர் தங்குகிறார்கள்.

    தாராவியில் கொரோனா தொற்று ஏற்பட்டு ஏற்கனவே ஒருவர் பலியானார். நேற்று 63 வயது மதிக்கத்தக்க இன்னொருவர் உயிரிழந்துள்ளார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

    நிலைமையை கட்டுப்படுத்த தாராவியை 9 பகுதிகளாக பிரித்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மக்கள் கதவை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களே அரசே நேரடியாக சென்று அவர்களுக்கு வினியோகித்து வருகிறது.
    Next Story
    ×