search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    இந்திரா உணவகங்களில் சித்தராமையா நேரில் ஆய்வு

    இந்திரா உணவகங்களில் சித்தராமையா நேரில் ஆய்வு செய்தார். இலவச உணவு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று பெங்களூரு வசந்த்நகர், ஹெப்பால், ஆர்.டி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்திரா உணவகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு உணவு சாப்பிட்ட மக்களுடன் அவர் கலந்துரையாடல் நடத்தினார். அதன்பிறகு சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திரா உணவகங்களில் நான் நேரில் ஆய்வு செய்து, மக்களுடன் கலந்துரையாடல் நடத்தினேன். இந்திரா உணவகங்களில் இலவச உணவு வழங்கியபோது, 700 முதல் 800 பேர் வந்து உணவு சாப்பிட்டனர்.

    விலை நிர்ணயம் செய்த பிறகு சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை 100 முதல் 150 ஆக குறைந்துவிட்டது என்று தெரியவந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு வாபஸ் ஆகும் வரை ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று நான் ஏற்கனவே முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை, விலை நிர்ணயம் செய்திருப்பதை ரத்து செய்யுமாறு முதல்-மந்திரியை வலியுறுத்துகிறேன்.

    இந்திரா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கினால், ஏழை மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பயன் அடைவார்கள். இதை முதல்-மந்திரி எடியூரப்பா புரிந்து கொண்டு இந்திரா உணவகங்களில் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.
    Next Story
    ×