search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஊரடங்கை மீறி வெளிநாட்டினர் 10 பேர் மசூதி வளாகத்திற்குள் தங்க வைப்பு - நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

    மகாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளிநாட்டினர் 10 பேரை மசூதி வளாகத்திற்குள் தங்க இடமளித்த நிர்வாகிகள் இரண்டு பேர் மீது வழக்குபபதிவு செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 238 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இதற்கிடையே, வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மக்கள் அத்தியவசிய காரணங்களை தவிர எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டம் நிவாசா நகரில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

    அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு மசூதி ஒன்றில் வளாகத்திற்குள் வெளிநாட்டினர் 10 பேர் மறைந்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் அனைவரையும் பிடித்து கொரோனா பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

    மசூதி வளாகத்திற்குள் மறைந்திருந்த 10 வெளிநாட்டினரும் கானா, செனகல், டிஜ்புட்டி, பினின் ஆகிய ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்களாவர். 

    அவர்களுக்கு மசூதிக்குள் தங்க அடைக்கலம் கொடுத்த அதன் நிர்வாகிகள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.  

    இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற அமைப்பின் சார்பில் நடந்த மத கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாடு மற்றும் உள்நாட்டை சேர்ந்த பலருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×