search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஒரு மணி நேரத்துக்கு ஒரு செல்பி எடுத்து அனுப்புங்கள் - வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு உத்தரவு

    கர்நாடகாவில் கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் ஜிபிஎஸ் இணைப்புடன் ஒரு மணி நேரத்துக்கு ஒரு செல்பி எடுத்த அரசுக்கு அனுப்ப வேண்டும் என மாநில மருத்துவ கல்வி மந்திரி தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை 251 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் கட்டாயம் தங்கள் வீடுகளில் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 

    ஆனாலும், சிலர் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் சுய தனிமைபடுத்தளுக்கு உள்ளாகமல் வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களுக்கு சகஜமாக செல்கின்றனர். இதனால், வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக ஏற்படுகிறது.

    இந்நிலையில், வீட்டில் கொரோனா தனிமைபடுத்தலுக்கு உள்ளானவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை செல்பி எடுத்து அரசுக்கு அனுப்ப வேண்டும் என அம்மாநில மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார். 

    இது குறித்து அவர் கூறூகையில்,''வீடுகளில் சுய தனிமைப்படுத்தளுக்கு உள்ளான நபர்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு செல்பி என்ற விகிதத்தில் போட்டோ எடுத்து அரசுக்கு அனுப்ப வேண்டும். அதில் ஜிபிஎஸ் தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அவர்கள் அனுப்பும் செல்பிக்கள் அனைத்தும் போட்டோ சரிபார்ப்பு குழுவால் ஆய்வு செய்யப்படும். 

    ஒரு வேளை செல்பி போட்டோக்களில் எதேனும் சந்தேகம் எழுதாலோ அல்லது தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டாலோ வீடுகளில் தனிமைபடுத்தளுக்கு உள்ளானவர்கள் அனைவரும் மிகப்பெரிய தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்’’ என்றார்.  
    Next Story
    ×