search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா தடுப்பு போருக்கு தயார்- தேசிய பேரிடர் மீட்பு படை அறிவிப்பு

    நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான அவசரகால பணிகளுக்கு தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை அறிவித்துள்ளது.
    கொல்கத்தா:

    பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்காக, தேசிய பேரிடர் மீட்புப்படை செயல்பட்டு வருகிறது. 12 படைப்பிரிவுகளாக, மொத்தம் 13 ஆயிரத்து 800 வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்நிலையில், தற்போது நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான அவசரகால பணிகளுக்கு தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை கூறியுள்ளது.

    இதுகுறித்து அதன் தலைமை இயக்குனர் எஸ்.என்.பிரதான் கூறியதாவது:-

    கொரோனாவுக்காக மாநில அரசுகள் உருவாக்கிய மாநில கட்டுப்பாட்டு அறைகளில் தேசிய பேரிடர் மீட்பு படை முகாமிட்டுள்ளது. தேவைப்படும்போது எங்களை அழைக்குமாறு அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். எங்களை மாநில அரசுகள் அழைக்கும்போது, போருக்கு செல்வதுபோல் தயாராவோம்.

    தற்போது, பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் எங்களை அழைத்துள்ளன. ஒரு படைப்பிரிவுக்கு 84 வீரர்கள் வீதம் சிறிய குழுக்களை அமைத்துள்ளோம். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இதர படைகளை சேர்ந்த 28 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×