search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி
    X
    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி

    இந்தியாவில் 649 பேருக்கு கொரோனா- பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது

    இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மனிதர்கள் மூலமாக இந்த வைரஸ் வேகமாக பரவுவதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகள் முடங்கி உள்ளனர்.

    இதுஒருபுறமிருக்க புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுவரை கொரோனாவால் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 42 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஜம்மு காஷ்மீரில் கொரோனா வைரசுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீநகர் இதயநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 நபர் உயிரிழந்துள்ளார். அவர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×