search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா சட்டசபை
    X
    தெலுங்கானா சட்டசபை

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

    குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தாக்கல் செய்த தீர்மானம் தெலுங்கானா சட்டசபையில் இன்று நிறைவேறியது.
    ஐதராபாத்:

    மத்திய அரசின் குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், தெலுங்கானா சட்டசபையில்  குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். இந்த தீர்மானம் உடனடியாக நிறைவேறியது.

    தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ்

    ஏராளமான மக்களின் பெயர்கள் விடுபட்டு போவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தில் மதம் மற்றும் வெளிநாடு தொடர்பான அம்சங்களை நீக்குமாறு மத்திய அரசை இந்த தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

    Next Story
    ×