
பாராளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் வங்கிகளில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கான பதிலை நிதித்துறை இணை மந்திரி தாக்குர் அளித்த பின்னர் துணை கேள்வி ஒன்றையும் ராகுல் காந்தி எழுப்பினார்.

சபாநாயகரின் இந்த முடிவுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். இதை தொடர்ந்து ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, எனது கேள்வியை சபாநாயகர் அனுமதிக்காதது ஒரு பாராளுமன்ற உறுப்பினரான என்னுடைய உரிமையை பறிக்கும் செயலாகும். சபாநாயகரின் இந்த நடவடிக்கையால் நான் வேதனை அடைந்துள்ளேன்.
வங்கிகளில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்களின் பெயர்களை வெளியிட இந்த அரசு ஏன் அஞ்சுகிறது? என்பது புரியவில்லை என்று குறிப்பிட்டார்.