search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான் விமானம்
    X
    ஈரான் விமானம்

    ஈரானில் தவித்த இந்தியர்களுடன் மற்றொரு விமானம் மும்பை வந்தது

    கொரோனா வைரஸ் பீதிக்கு இடையில் ஈரானில் சிக்கி தவிக்கும் சுமார் 6 ஆயிரம் இந்தியர்களில் 120 பேரை ஏற்றிவந்த மற்றொரு விமானம் இன்று பிற்பகல் மும்பை வந்தடைந்தது.
    மும்பை:

    கொரோனா வைரஸ் தாக்குதலால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளான ஈரானில் இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியுள்ளது.

    கொரோனா வைரஸ் பீதிக்கு இடையில் அங்கு வசிக்கும் சுமார் 6 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாகஅழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

    ஈரானில் இருந்து முன்னர் அழைத்து வரப்பட்ட இந்தியர்கள்

    ஏற்கனவே இந்தியா அனுப்பி வைத்த ராணுவ விமானம் மூலம் கொரோனா அச்சத்துக்கு இடையில் அங்கு தவித்த சிலர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

    இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 120 இந்தியர்களை ஏற்றிவந்த ஈரான் நாட்டு விமானம் இன்று பிற்பகல் 12.10 மணியளவில் மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தது.

    அதில் வந்த அனவரும் உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்கு பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் நகரில் உள்ள சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×