search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    வரி வழக்குகளுக்கு தீர்வு காணும் மசோதா - பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல்

    வரி தொடர்பான வழக்குகளில் சிக்கியவர்களுக்கு தீர்வு காணும் மசோதாவை, பாராளுமன்ற மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
    புதுடெல்லி:

    வரி தொடர்பான வழக்குகளில் சிக்கியவர்களுக்கு உதவும் வகையில், நேரடி வரிகள் தாவா தீர்வு முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பான மசோதாவை, பாராளுமன்ற மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

    அப்போது அவர் பேசுகையில், ‘‘ரூ.9 லட்சத்து 32 ஆயிரம் கோடி மதிப்புள்ள 4 லட்சத்து 83 ஆயிரம் நேரடி வரி வழக்குகள் பல்வேறு கோர்ட்டுகள் மற்றும் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்குகளில் சிக்கியவர்கள், உரிய வரி முழுவதையும் மார்ச் 31-ந்தேதிக்குள் செலுத்தினால், வட்டி மற்றும் அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்கலாம். இதன்மூலம், வழக்கை சந்திப்பதற்கான பணமும், நேரமும் மிச்சமாகும்’’ என்று கூறினார்.

    தற்போது, 20 வாரங்கள்வரை கொண்ட கருவை கலைப்பதற்கு அனுமதி உள்ளது. இனிமேல், 24 வாரங்கள் வரையிலான கருவை கலைப்பதற்கு அனுமதி அளிக்கும் மசோதாவை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்‌‌ஷ வர்தன், மக்களவையில் தாக்கல் செய்தார்.
    Next Story
    ×