search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    அனைத்து மில் தொழிலாளர்களுக்கும் வீடு வழங்க நடவடிக்கை: உத்தவ் தாக்கரே

    அனைத்து மில் தொழிலாளர்களுக்கும் வீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
    மும்பை :

    மும்பையில் மில் தொழிலாளர்களுக்காக மகாடா சார்பில் 3 ஆயிரத்து 894 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை வாங்க 1 லட்சத்து 74 ஆயிரத்து 36 மில் தொழிலாளர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 3 ஆயிரத்து 894 வீடுகளுக்கான பயனாளர்களை தேர்ந்தெடுக்கும் மகாடா குலுக்கல் நேற்று லோயர் பரேலில் நடந்தது. இந்த விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, வீட்டு வசதித்துறை மந்திரி ஜித்தேந்திர அவாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

    உங்களுக்கான (மில் தொழிலாளர்கள்) வீடுகள் ஒதுக்கப்பட்டவுடன் ‘டீ' குடிக்க என்னை கூப்பிடுங்கள். அந்த வீட்டில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். உங்களுக்கு ஒதுக்கப்படும் வீடுகளை விற்றுவிட்டு மும்பைக்கு வெளியில் குடியேறி அதன் மீதான உரிமையை இழந்துவிட வேண்டாம்.

    ஒருங்கிணைந்த மராட்டியத்திற்காக மில் தொழிலாளர்கள் அதிக பங்களிப்பை அளித்துள்ளனர். எனவே மாநிலத்தில் உள்ள அனைத்து மில் தொழிலாளர்களுக்கும் வீடு கட்டி கொடுக்கும் வழிமுறைகளை அரசு கண்டறியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×