search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொடேரா கிரிக்கெட் மைதானத்தின் நுழைவுவாயில்
    X
    மொடேரா கிரிக்கெட் மைதானத்தின் நுழைவுவாயில்

    மொடேரா மைதானத்தை பார்வையிட்ட அமித் ஷா: 25 படுக்கையுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைப்பு

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவருடன் மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஷ்னெர் மற்றும் முக்கிய அதிகாரிகள் வருகை தருகிறார்கள்.
    டிரம்பை வரவேற்பதற்காக அகமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. டிரம்பும், மோடியும் அகமதாபாத்தில் 22 கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக ஊர்வலமாக செல்கின்றனர். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேரணி முடிந்தவுடன் சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் செல்கிறார்.  அதன்பின் மொடேரா கிரிக்கெட் மைதானம் செல்லும் டிரம்ப் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின்போது சுமார் ஒருலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்காலிக மருத்துவமனை

    இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மொடேரா மைதானம் சென்றார். அங்கு  அவர் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். அத்துடன் நிகழ்ச்சியான ஏற்பாட்டையும் பார்வையிட்டார். ஏராளமானோர் கூடுவதால் முன்னெச்சரிக்கை காரணமாக 23 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×