search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்வி
    X
    கல்வி

    மத்திய பட்ஜெட்- கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி

    கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன் கூறினார்.
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    விரைவில் புதிய கல்விக்கொள்கை அறிவிக்கப்படும். மேலும் கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும். கல்வித்துறைக்கு ரூ.99 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சுகாதாரத் துறைக்கு பட்ஜெட்டில் 69 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    2025ம் ஆண்டுக்குள் காசநோயை நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்பற பெண்களின் வளர்ச்சிக்காக தானியலட்சுமி திட்டம் தொடங்கப்படும். மாவட்ட வாரியாக தோட்டக்கலை பொருட்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
    Next Story
    ×