என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
Byமாலை மலர்25 Jan 2020 11:23 AM GMT (Updated: 25 Jan 2020 11:23 AM GMT)
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சண்டிகர்:
மத்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள மாநில சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் முதல் மந்திரி பினராயி விஜயன் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதன்மூலம் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்றது.
இதற்கிடையே, மத்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில சட்டசபையிலும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மத குழுக்களுக்கும் சட்டத்தின்முன் சமத்துவத்தை உறுதி செய்யவும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யுமாறு இந்திய அரசிடம் வலியுறுத்த சபை தீர்மானிக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×