search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி
    X
    மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி

    குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற மாட்டோம் - மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி உறுதி

    குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற மாட்டோம் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் இந்த சட்டத்தை திரும்பப்பெற மாட்டோம் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தில் இனி எந்த ஒரு மாற்றமும் செய்யப்போவதில்லை. திரும்பப்பெற போவதும் இல்லை. இந்த சட்டம் பற்றி புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் உள்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்தியே தீர வேண்டும். அமல்படுத்த முடியாது என்று யாரும் சொல்ல முடியாது.

    இந்திய முஸ்லிம்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி அளிக்கிறேன். சிறுபான்மையின மக்களுக்கு இந்தியா பாதுகாப்பான நாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×