search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    ஹெட்போன் மாட்டியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற இளம்பெண் ரெயில் மோதி பலி

    மகாராஷ்டிராவில், காதுகளில் ஹெட்போன் மாட்டியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற இளம்பெண் ரெயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தானே:

    தொலைத்தொடர்பு சாதனமான மொபைல் போன்கள் இல்லாமல் இன்று உலகம் இல்லை எனும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மொபைல் போன்களில் மூழ்கி இருக்கும் காரணத்தால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

    வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவது, செல்பி எடுப்பது, சாலையில் நடந்து செல்லும் போது போனை பார்ப்பது போன்றவற்றினால் விபத்துகள் ஏற்படுகின்றன.

    அவ்வகையில், காதுகளில் ஹெட்போன் மாட்டியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் ரெயில் மோதி உயிரிழந்த சோக சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் நகரில் நிகழ்ந்துள்ளது.  

    மகாராஷ்டிராவின் கல்யாண் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அந்துதேவி துபே (வயது 28). கல்லூரியில் படிக்கும் இவர் நேற்று வழக்கம்போல் தான் பயிலும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். கல்யாண் ரெயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சங்கேல்வடி பகுதியில் உள்ள தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வந்த புறநகர் ரெயில் மோதி அந்து தேவி உயிரிழந்தார். 

    ‘விபத்தின் போது அந்துதேவி தனது காதுகளில் ஹெட்போன் மாட்டியபடி நடந்து சென்றுள்ளார். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×