search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரி
    X
    வருமான வரி

    வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

    வருமான வரி குற்றங்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் சமரச திட்ட கால அவகாசத்தை ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவு பிறப்பித்தது.
    புதுடெல்லி :

    வருமான வரி குற்றங்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் சமரச திட்டம், கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, வருமான வரி குற்றங்களில் ஈடுபட்டவர்களில் தகுதி உடையவர்கள் மட்டும் உரிய வரி மற்றும் கூடுதல் வரி செலுத்தி, வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம்.

    ஆனால், கடுமையான வரி ஏய்ப்பு, பொருளாதார குற்றம், பயங்கரவாத நிதி உதவி, வெளிநாட்டு சொத்து குவிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இது பொருந்தாது.

    இந்த திட்டம், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது. கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் இதற்கான கால அவகாசம் முடிவடைந்தது.

    இந்நிலையில், கால அவகாசத்தை ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. திட்டத்துக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து புகார்கள் வந்ததால், கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக வாரியம் கூறியுள்ளது.
    Next Story
    ×