search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா மற்றும் பிரியங்கா காந்தி
    X
    அமித் ஷா மற்றும் பிரியங்கா காந்தி

    2 கோடி பேருக்கு வேலை என்பார்கள் பின்னர் பல்கலைக்கழகங்களையே அழித்துவிடுவார்கள் - பாஜக மீது பிரியங்கா சாடல்

    2 கோடி பேருக்கு வேலை என கூறி ஆட்சிக்கு வந்த பின்னர் பல்கலைக்கழகங்களையே அழித்துவிடுவார்கள் என பாஜக மீது பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    பாஜக தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது,  ‘‘முதலில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும். அதைதொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்படும். இது மேற்கு வங்காளத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தான். காலவரிசையை புரிந்துகொள்ளுங்கள்’’ என பேசியுள்ளார்.

    இதற்கிடையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.  

    இந்நிலையில், அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்த 'காலவரிசையை புரிந்துகொள்ளுங்கள்' என்ற கருத்திற்கு பிரியங்கா காந்தி இன்று பதிலடி கொடுத்துள்ளார். 

    இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கால வரிசையை புரிந்துகொள்ளுங்கள். முதலில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்து அவர்கள் (பாஜக) ஆட்சியை அமைந்தார்கள். பின்னர் அவர்கள் உங்கள் பல்கலைக்கழங்களை அழிப்பார்கள். பின்னர் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை அழிப்பார்கள். 

    பின்னர் நீங்கள் போராட்டத்தில் ஈடுபடுவீர்கள். பின்னர் போராடும் உங்களை முட்டாள்கள் என அழைப்பார்கள். ஆனால் நாட்டின் இளைஞர்கள் அடங்கமாட்டார்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×